குண்டுத்தாக்குதல் தொடா்பாக ஆராய ஜனாதிபதி கமிஷன் ஒன்று நியமிக்கப்பட்டால் சிறிசேனவும் குற்றவாளியாக இனம் காணப்படுவார் என்று முஜிபுா் றஹ்மான் தொிவித்துள்ளாா்.
பாராளுமன்றத்தில் நேற்று மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்திற்க எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்ககையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.
அவா் தொடா்ந்து உரையாற்றுகையில்
கடந்த வருடம் ஒக்டோபா் மாதம் இந்நாட்டில் அரசியல் சதி ஒன்று இடம்பெற்றது. அரசியல் யாப்பு ரீதியிலான சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. மக்களின் போராட்டத்திற்கு பிறகு இந்த அரசியல் சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் எமக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தபோதும், சட்டம் ஒழுங்கு அமைச்சு எமக்கு கிடைக்கப் பெறவில்லை.
பாதுகாப்பு அமைச்சோடு சேர்த்து சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்துக் கொண்டார். சட்டம் ஒழுங்கு என்பது இந்நாட்டின் பாதுகாப்போடு தொடா்புள்ள ஒரு விடயமாகும். கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் ஜனாதிபதியே இதனை வைத்துக்கொண்டார்.
இன்று ஜனாதிபதிக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஜனாதிபதி குண்டுத் தாக்குதலின் பின்னா் குழு ஒன்றை நியமித்தார். சட்டரீதியான எந்த அந்தஸ்தும் இல்லாத எந்த வலுவுமில்லாத மூன்று நபா்களைக் கொண்ட ஒரு குழுவை ஜனாதிபதி நியமித்தாா். இதற்கு பதிலாக அவருக்கு விசேட ஜனாதிபதி கமிசன் ஒன்றை நியமிக்க முடியும். ஆனால் அவா் அதனை நியமிக்க வில்லை. அது ஏன்? ஜனாதிபதி கமிஷன் ஒன்றை நியமித்தால் அவரும் குற்றவாளியாக இனம் காணப்படுவார்.
ஜனாதிபதி அவா்கள் வேண்டுமென்றே தனது பொறுப்பிலிருந்து நழுவிய விடயம் வெளியே வந்து விடும் . அது மட்டுமல்லாமல் ஜனாதிபதி கமிஷன் அறிக்கை மக்கள் முன் சமா்ப்பிக்கப்படவும் வேண்டும்.
இதன் காரணமாகவே ஜனாதிபதி அவா்கள் , ஜனாதிபதி கமிஷன் ஒன்றை அமைக்காமல் மூன்று போ் கொண்ட குழு ஒன்றை அமைத்து அதன் அறிக்கையின் படி பொலிஸ் மாஅதிபரையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும் சிறையில் அடைத்துள்ளாா் என்று குறிப்பிட்ட முஜீபுா் ரஹ்மான், ஜேவிபி யினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானமத்தில் ஜனாதிபதியின் பெயா் குறிப்பிடப்படாதது தொடா்பாகவும் கேள்வியெழுப்பினாா்