பிரதான செய்திகள்

குடும்பத் தகவல் திரட்டுப் படிவம் பொலிஸ் கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக அந்தந்தப் பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் குடும்பங்களிலுள்ள அங்கத்தவர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


பொலிஸாரால் விநியோகிக்கப்படும் குடும்பத் தகவல் திரட்டுப் படிவங்களுக்கமைவாக ஒவ்வொரு குடும்பமும் தத்தமது விவரங்களை வெகு விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டுள்ளனர்.

பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளினூடாகவும் இந்த அறிவித்தல்கள் அவ்வப்போது விடுக்கப்படுகின்றன.

பொலிஸார் விநியோகித்துள்ள குடும்ப விவர சேகரிப்பு படிவத்தில் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தவரினதும் விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

Related posts

ரணிலின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளது.

wpengine

பசளைக்கான பணத்தை மக்கள் வங்கி உடனடியாக செலுத்த வேண்டும்.

wpengine

வில்பத்து சரணாலய வீதி வழக்கில் முன்னால் அமைச்சர் றிஷாட் 04வது பிரதிவாதி

wpengine