பிரதான செய்திகள்

குடிநீர் இல்லை! வீதி மறித்து வவுனியாவில் போராட்டம்

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் மரையடித்தகுளம் பகுதியிலுள்ள 45 இந்திய வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி இன்றைய தினம் ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மரையடித்தகுளம் பகுதியில் சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த எங்களை இப்பகுதியில் குடியமர்த்தினர்.

தற்போது வறட்சியான காலநிலை காரணமாக அப்பகுதியில் அமைத்துக்கொடுக்கப்பட்ட பொதுக்கிணறு, குழாய்க்கிணறு என்பவற்றில் தற்போது நீர் இல்லை. ஒரே ஒரு கிணற்றிலிருந்தே தற்போது எமது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றோம்.

அடிப்படைத் தேவையான குடிநீர், போக்குவரத்துப் பாதை, காட்டு யானைகளின் அச்சுறுத்தல் என்பனவற்றிலிருந்து தம்மைப் பாதுகாக்குமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏ9 வீதியுடனான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தை உதவி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே. ஏ. எம். ஜயசேன போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

அத்துடன், உடனடித் தேவையாக தண்ணீரை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு தருவதாகவும் நாளைய தினம் பிரதேச செயலாளர், அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி நிரந்தரத்தீர்வு பெற்றுத்தருவதாகவும் அவர் அளித்த வாக்குறுதியையடுத்து குறித்த பகுதியில் இருந்து மக்கள் அகன்றனர்.

Related posts

ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

wpengine

சீனாவின் மிகவும் வயதான 135 பெண் மரணம்.

wpengine

முல்லைத்தீவில் முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டம்! “றிஷாட்” கூளாமுறிப்பு வீழாது.

wpengine