செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

குஞ்சுக்குளம் கிராமத்தில் ‘அருவி ஆறு சுற்றுலா வலயம்’ திறந்து வைக்கப்பட்டது.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட ‘அருவி ஆறு சுற்றுலா வலயம்’ நேற்று செவ்வாய்க்கிழமை (😎 மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் பத்திநாதன் மற்றும் வடமாகாண சுற்றுலாத்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், நானாட்டான் பிரதேச சபை செயலாளர் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது அருவியாறு சுற்றுலா வலய பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து தொங்கு பாலமும் திறந்து வைக்கப்பட்டது.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் பகுதிக்கு வடக்கு மற்றும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும்,புலம்பெயர் நாடுகளில் இருந்தும் நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் மற்றும் அருவி ஆறு ஆகியவற்றை பார்வையிடுவதற்காக வந்து செல்வது வழமை.

வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு குறித்த சுற்றுலா வலயம் திறந்து வைக்கப்பட்ட அமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் றிஷாட்டை ஒழிக்க டயஸ்போரவுடன், சில முஸ்லிம் அரசியல்வாதிகள்

wpengine

மஹிந்த அணியின் மேதினக் கூட்டம் : பெருந்திரளானோர் பங்கேற்பு : ஜனாதிபதி, சம்பந்தன், சி.வி.க்கு எதிராக கோஷம்

wpengine

லீசிங் வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது ஜனாதிபதி உத்தரவு

wpengine