Breaking
Mon. Nov 25th, 2024

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றது. இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 13-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்களை குவித்தது.

சாய் சுதர்சன் அரை சதமடித்து 53 ஓட்டத்தில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய விஜய் சங்கர் 21 பந்தில் அரை சதமடித்தார்.

அவர் 63 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார். ப்மன் கில் 39 ஓட்டத்தில் அவுட்டானார்.கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஜெகதீசன் 6 ஓட்டமும், குர்பாஸ் 15 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

3வது ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ரானா ஜோடி அதிரடியாக துடுப்பெடுத்தாடியது. இந்த ஜோடி 100 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் ரானா 45 ஓட்டத்தில் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 40 பந்தில் 5 சிக்சர், 8 பவுண்டரி உட்பட 83 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.

17-வது ஓவரை வீசிய ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆண்ட்ரூ ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்குர் ஆகியோரை வெளியேற்றினார்.

ஆனால், கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அணியை திரில் வெற்றிபெற ரிங்கு சிங் செய்தார் . இறுதியில், கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும்,
அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

A B

By A B

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *