பிரதான செய்திகள்

கிழக்கு முனையம் சில அமைச்சர்களின் நாடகத்தை வைத்து மக்கள் ஏமாந்து விட வேண்டாம்

இன்று(31) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளருமான ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்த கருத்துக்கள்.

கிழக்கு முனையம் தொடர்பாக நேற்று அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் கூட்டாக தமது நிலைப்பாட்டை வெளிப்படைத்தியிருந்தனர்.


இவர்களின் இந்த நாடகத்தை வைத்து மக்கள் ஏமாந்து விட வேண்டாம்.இவர்களின் இரண்டாம் நாடகம் இது.இவ்வாறான ஒர் நாடகத்தை 20 ஆவது திருத்தத்தின் போதும் வெளிப்படுத்தியிருந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.இறுதியில் “சங்வேதி” ஏறபட்டு ஒரு நாளுக்குள் இவர்களின் நிலைப்பாடு மாறி 20 க்கு ஆதரவளித்தனர்.

இன்று கட்சி அரசியலுக்கப்பால் சகல தொழிற்சங்கங்களும் ஒன்றினைந்து இதை எதிர்கின்றனர்.தொழிற்சங்கங்கள் விளிப்பாக இருங்கள்.அரசங்கத்தின் பலர் வந்து வித்தியாசமான நிலைப்பாட்டை முன்வைப்பார்கள். நம்பிவிட வேண்டாம்.இது அரசாங்கத்தின் நாடகம்.உங்களை சந்திக்க வரும் அமைச்சர்கள் மக்களின் பக்கம் இல்லை.அமைச்சரகள் வெறும் பந்துகள் என்று கூறினார்.

பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி மார் தட்டி சதந்திர தினம் கொண்டாட என்ன “அபிமானம்” உள்ளது என்று கேட்கிறேன்.இரகசியமான முறையில் பல இடங்களை இந்த அரசாங்கம் விற்று விட்டது.எம் சி சி மூலம் அநுராதபுரத்திற்கும் பொலன்னறுவைக்கும் செல்வதற்கு கடவுச் சீட்டு பெற வேண்டும் என்று நாடு பூராக பேசியவர்கள் இன்று நாட்டின் நாலா பாகங்களிலும் உள்ள இடங்களை விற்கின்றனர்.இந்த நிலையில் ஜனாதிபதியால் எவ்வாறு உத்தியோகபூர்வ இலட்சினையை நெஞ்சில் பதித்துக் கொண்டு செல்ல முடியும்?

இன்று அரசாங்கத்தின் நாடகத்தை பலர் பாத்திரம் ஏற்று நடிக்கின்றனர்.இவற்றுக்கு மக்கள் ஏமாற வேண்டாம். 20 ஆம் திருத்தத்தின் போது இவர்களின் நாடகத்தை படிப்பினையாகக் கொள்ளுங்கள் என்று மக்களை வேண்டிக் கொண்டார்.

Related posts

கட்டார் பொருளாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் றிஷாட்

wpengine

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு! தோப்பூரில் ஆர்ப்பாட்டம்

wpengine

கொலையை மூடி மறைத்து பிரேத பரி­சோ­தனை அறிக்கை

wpengine