பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடு: கடற்படை அதிருப்தி

கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நசீர் திருக்கோணமலை பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை தூற்றிய சம்பவம் தொடர்பில் கடற்படை அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்று இன்றைய தினம் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கடற்படை தளபதி ரவீந்திர விஜயகுணவர்தன தெரிவித்தார்.

சம்பூர் மகாவித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முதலமைச்சர், கடற்படை அதிகாரி ஒருவரை இந்த இடத்தில் இருந்து அகன்று செல்லுமாறு தூற்றிய காணொளி இணையங்களில் பரப்பப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த காணொளியை தாம் பார்த்ததாக குறிப்பிட்டுள்ள ஹெட்டியாராச்சி, முறைப்பாடுகள் செய்யப்பட்டால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை, சம்பூரில் கடற்படை அதிகாரியை திட்டிய சம்பவம் தொடர்பில் மாற்று பிரசாரங்கள் முன்கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தனிப்பட்ட அதிகாரி சம்பந்தப்பட்டது என குறிப்பிட்ட அவர் முழு படைவீரர்களையும் அவதூறு செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புதிய தேர்தல் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Editor

லங்கா பிரீமியர் லீக் அட்டவணை வெளியானது!

Editor

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடம்பெறவில்லை

wpengine