Breaking
Sun. Nov 24th, 2024
(எம்.ரீ. ஹைதர் அலி)
நம் முஸ்லிம் சமூகம் என்றுமில்லாத அளவு இன்று சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இன்று அகதிகளாக அந்நிய நாடுகளிலே பல மையில் தூரம் நடைபாதையாக சென்று தங்களது குழந்தைகளையும், உறவுகளையும் இழந்தவர்களாக குறிப்பாக தங்களது சொத்துக்களை இழந்து இன்று அகதிகளாக குடியேறுகின்ற ஒரு மிகப்பரிதாபகரமான ஒரு சூழ்நிலையிலேதான் நாம் இந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம் என தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் அந்த மக்கள் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்காக நாம் அனைவரும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக. குறிப்பாக ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தை நினைவு கூறுக்கின்ற ஒரு திருநாளாகும். ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் நாம் எமது இஸ்லாமிய விழுமியங்களையும், சிறந்த பண்புகளையும் வெளிப்படுத்த வேண்டும் குறிப்பாக தியாகத்தோடு நாங்கள் தியாகத்தைச் செய்து ஏனையவர்களுடன் வாழுக்கின்ற ஒரு சூழலை எம்மத்தியில் எமக்குள்ளே உருவாக்கிக் கொள்கின்ற ஒரு தியாக மனப்பாங்கை உருவாக்குகின்றதுதான் இந்த ஹஜ்ஜூப் பெருநாளாகும்.

ஏக வல்லோன் அல்லாஹுவின் இறைக்கட்டளையினை ஏற்று, பல்லாண்டு காலம் இறைவனிடத்தில் மன்றாடி கேட்டுப்பெற்ற தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை இறைவனுக்காக பலியிட தயாரான‌ அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்த இப்ராஹீம் நபியவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே அல்லாஹ் அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டான். படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பான் கொடுக்கச் செய்தான் இறைவன்.

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு எடுத்து நடக்க முடியுமோ அந்தளவு இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தர்களில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளான இந்த ஹஜ்ஜுப் பெருநாளில் நல்ல‌ எண்ணங்களோடு வாழ்ந்து மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக.

அந்த வகையில் இன்று நம்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அமைதியான சூழலும், சமாதானமும், இன ஒற்றுமையும் தொடர்ச்சியாக தொடர வேண்டும். நாம் அனைவரும் நிம்மதியோடும், ஒற்றுமையோடும் வாழ்வதற்காக ஏக வல்லோனான அல்லாஹ்விடத்தில் பிராத்திப்போமாக. மேலும் அனைத்து நாடுகளிலுமிருந்து இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்கமா நகருக்கு சென்றிருக்கும் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அல்லாஹ்தஆலா ஆக்கியருள்வானாக என்ற பிரார்த்தனையோடு தனது வாழ்த்துச் செய்தியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.unnamed
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *