பிரதான செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தேவைகளை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர்.

பல்கலைகழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டு இதுவரை மாணவர்களிடம் கையளிக்கப்படாமை மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலான பதாதைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு எதிரான சுலோகங்களையும் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

பெருமளவிலான மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.1013124768East

Related posts

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்:

wpengine

ரணிலை,சஜித்தை தோற்கடிக்க பசில் புதிய திட்டம்

wpengine

வவுனியா ஒருங்கிணைப்பு கூட்டம்! முஸ்லிம் இணைக்குழு தலைவர்கள் கலந்துகொள்ள வில்லை

wpengine