பிரதான செய்திகள்

கிழக்கு பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்டை! பலர் விசனம்

கிழக்கு மாகாண வேலை­யில்லாப் பட்­ட­தா­ரி­களை ஆசி­ரியர் சேவைக்குள் உள்­ளீர்ப்­ப­தற்­கான போட்­டிப்­ப­ரீட்சை எதிர்­வரும்  ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி மாவட்­ட­ரீ­தியில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதற்­கான அனு­மதி அட்­டைகள் பரீட்­சார்த்­தி­க­ளுக்கு மாகாண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வினால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும் இவ் அ­னு­மதி அட்­டைகள் உயர்­தே­சிய கணக்­கியல் டிப்­ளோமா பெற்ற வர்த்­த­கப்­பட்­ட­தா­ரி­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­ட­வில்லை. இவர்கள் கடந்­த­கால போராட்­டத்தில் பூர­ண­மாக ஈடு­பட்­ட­வர்கள். சுமார் 500பேர் கிழக்கில் உள்­ளனர்.

தமக்கு ஆசி­ரியர் நிய­மனம் நிச்­சயம் கிடைக்கும் என எதிர்­பார்த்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு ஏமாற்­றமே கிடைத்­துள்­ளது.

இதனை கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரும் ஏனை­யோரும் கருத்­திற்­கொள்­ள­வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இது தொடர்பில் பாதிக்­கப்­பட்ட கல்­மு­னை­யைச்­சேர்ந்த  வர்த்­த­கப்­பட்­ட­தாரி தமிழ்ச்­செல்வி கருத்­து­ரைக்­கையில்:

தங்­க­ளுக்கு ஏன் அனு­மதி அட்­டைகள் அனுப்­பப்­ப­ட­வில்­லை­யென சம்­பந்­தப்­பட்ட பரீட்­சைப்­ப­கு­தி­யி­ன­ரிடம் கேட்­ட­போது 1990.44 சுற்­று­நி­ரு­பத்தின் பிர­காரம் இத்­த­கைய பட்­ட­தா­ரி­க­ளுக்கு நிய­மனம் வழங்­க­மு­டி­யாது என வேண்­டா­வெ­றுப்­பாக சுருக்­க­மா­கப்­ ப­தி­ல­ளித்­து­விட்டு தொலைபேசியை வைக்­கின்­றார்கள்.

ஆனால் எமக்கு முன்னர் எம்­போன்ற பட்­ட­தா­ரிகள் கிழக்கில் ஆசி­ரி­ய­ர்களா­கவும் அதி­ப­ர்களா­கவும் சேவை­யாற்­றி­வ­ரு­கின்­றனர். அது­மட்­டு­மல்ல. தென் மாகாணம் மற்றும் வட­மத்­திய மாகா­ணங்­களில் எம்­போன்­ற­வர்கள் அரச தொழி­லுக்கு இம்­முறை கூட தெரி­வாகி சேவை­யி­லுள்­ளனர்.

எம்­மிடம் பல்­க­லைக்­க­ழ­கங்கள் மானிய ஆணைக்­குழு வழங்­கிய பட்­ட­தாரி சான்­றி­தழும் இருக்­கின்­றது.

இந்­நி­லையில் எமக்கு மட்டும் ஏனிந்த புறக்­க­ணிப்பை கிழக்கு மாகா­ண­சபை

முன்­வைத்­துள்­ளது? நாம் அனைவரும் ஓரிரு நாட்­களில் ஒன்றுசேர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த ஆலோசித் துவருகின் றோம் என்றார்.

 

Related posts

மன்னார், மாந்தையில் பௌத்த விகாரை! சட்டவிரோத மீறல் சிவகரன்

wpengine

கத்தார் வாழ் புத்தள சகோதர்கள் அமைப்பின் வருடாந்த ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்று கூடல்

wpengine

கிழக்கை குறிப்பாக மட்டக்களப்பை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை

wpengine