எதிர்வரும் தேர்தலில் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து தூய்மையான முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி, அதன் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணிக்கு அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய முஸ்லிம் காங்கிரஸ், எம்.ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உட்பட மேலும் சில கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் அரசியல் கூட்டணியின் கொள்கை மற்றும் பதிவு செய்யும் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்பகுதியில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டு கூட்டாக வெற்றிப் பெறுகின்றன.
எனினும் சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய அரசியல் கட்சிகள் தனித்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைகின்றன.
இதனால், கூட்டணியாக போட்டியிடுவதே இதற்கான வெற்றிகரமான தீர்வாக அமையும் எனவும் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.