பிரதான செய்திகள்

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இப்தாரும் முஸ்தபா நினைவுப் பேருரையும்

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் வைபவமும் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் மர்ஹூம் எம்.ஐ.எம்.முஸ்தபா நினைவுப் பேருரை நிகழ்வும் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நான்கு மணி தொடக்கம் அக்கரைப்பற்று ரீ.எப்.சி.மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் பிரதிக் கல்வித் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிராந்திய ஊடகவியலாளர்களுடன் உலமாக்கள், கல்விமான்கள், அரச உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல தரப்பினரும் அழைக்கப்பட்டுள்ளனர் என ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிர்வாகச் செயலாளர் செயிட் அஸ்லம் மௌலானா தெரிவித்தார்.

Related posts

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் அரசியல் பழிவாங்கும் இடமாற்றம்

wpengine

மஹிந்தவின் சந்திரன் 8ஆம் நிலையில் இருந்து 4க்கு மாற்றம்

wpengine

நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்.

wpengine