பிரதான செய்திகள்

‘கிழக்கு அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படும்’ மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட தோப்பூர் பிரமுகர் தெரிவிப்பு!

(அமைச்சரின் ஊடகப்பிரிவு)

தோப்பூர் பிரதேசத்தின் பிரபல சமூக சேவகரும், கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் (RDS) தலைவருமான ஏ.எஸ்.ரிபாஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். கட்சியின் மத்திய குழுத் தலைவர் அப்துல் ரசாக் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே, அவர் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

காலாகாலமாக எமது பிரதேசவாழ் மக்கள் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களித்து வந்தபோதும், இந்தப் பிரதேசத்தில் எந்தவிதமான அபிவிருத்தியும் இதுவரை இடம்பெறவில்லை.

கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசியலில் கால் பதித்தன் பின்னரே, இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தி செயற்பாடுகள் தலைகாட்டத் தொடங்கியுள்ளன.

பல மாதங்களுக்கு முன்னர், தோப்பூருக்கு வருகை தந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இந்தப் பிரதேச மக்களும், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் விடுத்த வேண்டுகோள்களை, அமைச்சர் ரிஷாட் படிப்படியாக நிறைவேற்றத் தொடங்கியுள்ளார்.

அடுத்தடுத்த நாட்களில் இந்தப் பிரதேசத்தில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன. அந்தவகையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரத்தினை பலப்படுத்துவதற்காக நான் எந்தவிதமான எதிர்ப்பார்புக்களும் இன்றி கட்சியில் இணைந்துகொண்டேன்” இவ்வாறு புதிதாக கட்சியில் இணைந்துகொண்ட சமூக சேவையாளர் ரிபாஸ் தெரவித்தார்.

Related posts

நாற்காலி மாற்றுத்திறனாளி மைத்திரிபால சிறிசேனவிடம் பல்வேறு கோரிக்கைகள்

wpengine

கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் சிறீதரன் முறைப்பாடு

wpengine

அமைச்சர் றிசாத்தை மக்கள் சேவகனாக நாங்கள் பார்க்கின்றோம்! உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்

wpengine