Breaking
Tue. Nov 26th, 2024
(முகம்மட் பிர்தௌஸ் – கல்முனை)
கிழக்கு மாகாணத்தின் அரசியல் தற்போது பலத்த மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல பிரதேசங்களும் வாக்கு வங்கிகளும் இன்று சரிவை நோக்கி நகர்ந்துள்ளது.

கிழக்கில் உருவாகியுள்ள முஸ்லிம் கூட்டமைப்பின் நகர்வுகள் இதற்கு முக்கியமான காரணமாகும்.

வெவ்வேறு கொள்கையுடன் கிழக்கில் பிரிந்து செயற்பட்ட முஸ்லிம் தலைமைகள் தற்போது ஒன்றுபட்டு செயற்படுவதற்கு முன்வந்தமையே இந்த தலைகீழ் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.

ரவூப் ஹக்கீமின் விசுவாசிகளாக இருந்த பலர் இன்று அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள். அவர்கள் ரவூப் ஹக்கீமை பகிரங்கமாக மேடை போட்டு எதிர்க்கும் நிலைக்கு பலமடைந்துள்ளனர்.

பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரை ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு வாசங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டுதான் உள்ளன.

ஏ.எல்.எம்.அதாவுல்லா அணி, ரிசாத் பதியுதீன் அணி, ஹஸன் அலி அணி, பஷீர் சேகுதாவுத் அணி, அன்சில் தாஹீர் அணி, பொத்துவில் அணி, ரவூப் ஹக்கீமுடன் இருந்து அவரை வீழ்த்தும் அணி, ஊடகவியலாளர் அணி, குமாரி குரேயின் சீடியை வெளியிட தயாராக உள்ள அணி, சிவில் அமைப்புக்கள் என பலர் இன்று ரவூப் ஹக்கீமுக்கு எதிராக வெளிக்கிட்டுள்ளமைய இலகுவாக தட்டிக் கழித்து விட முடியாது.

இதில் குறிப்பிடக் கூடிய முக்கிய விடயம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூன்று எம்பிக்களில் ஒருவர் முழுமையாக ரவூப் ஹக்கீமை அம்பாறை மாவட்டத்திலிருந்து துரத்த வேண்டும் என்று இரகசியமாக முஸ்லிம் கூட்டமைப்பினருக்கு பலமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் கட்சியின் முக்கிய இரகசியங்களையும் வழங்கி வருவதாக அறிய முடிகின்றது.

இவைகளின் தாக்கம் முகாவின் இன்றைய நிலவரம் மிகவும் அதாளபாதாளத்தை நோக்கியே செல்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் முகா வினதும் ரவூப் ஹக்கீமினதும் வீழ்ச்சி மிக விரைவில் விழாவாக கொண்டாடப்படும் நாள் அம்பாறை மாவட்டத்தில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

அதே போன்று எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் ரவூப் ஹக்கீமுக்கு பலத்த சவலாலாகவே அமையவுள்ளது.

இவ்வாறான நிலையில் ஹக்கீம் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் வீறுகொண்டு எழுவதற்கு என்ன வியூகங்களை கையாளப்போகின்றார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.

எனினும் அவருக்கான சந்தர்ப்பங்கள் முழுமையாக அவரை விட்டு விலகவில்லை. அவருக்கு தற்போது தேவைப்படுவது விசுவாசமாகவும் நேர்மையாகவும் களத்தில் நின்று அரசியல் ஞானங்களை வகுக்கக் கூடியவர்களே.

அவ்வாறானவர்களை கட்சிக்குள் உள்ளீர்த்து பொறுப்புக்களையும் முக்கிய பதவி நிலைகளையும் பகிர்வதன் மூலமே தனது தலைமைப் பதவியையை தக்கவைக்க முடியும் என்பதுடன் முஸ்லிம் கூட்டமைப்பு எனும் பலத்த சக்தி எனும் காட்டு வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் முடியும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *