(அஸ்லம் எஸ்.மௌலானா)
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆசியா பவுன்டேஷனும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்து முன்னெடுக்கவுள்ளன.
இதன் முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான மூலோபாயங்களை தயாரிக்கும் பொருட்டு நிபுணத்துவ ஆய்வுக் கலந்துரையாடல்கள் மாவட்ட மட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கருத்தரங்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் கே.குணநாதன்
தலைமையில் ஆசியா பவுண்டேஷன் நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
இதில் சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம், பீடாதிபதி கலாநிதி ராஜ் ரத்னாயக்க, சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா, நிகழ்ச்சி இணைப்பாளர் ரி.தஙகேஷ் ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்றிருந்தனர்.