பிரதான செய்திகள்

கிளிநொச்சி வெளிநோயாளர் புதிய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர்

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் ஆரம்ப மருத்துவ வெளிநோயாளர் நிலையத்தின் புதிய கட்டடம் இன்று (26.02.2018) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் க.குணசீலன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டடத்தினை நோயாளர் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

பிரமந்தனாறு, புன்னைநீராவி கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளில் நோயாளர் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு வடமாகாண சுகாதார அமைச்சினால் சுமார் 2 கோடி ரூபா செலவில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண பிராந்திய சுகாதார பணிப்பாளர், வடமாகாண சபை உறுப்பினர்கள்,  கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் குமாரவேல், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் மைதிலி மற்றும் சுகாதார ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Related posts

அரச வேலை நேர மாற்றம்

wpengine

அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை.!!

Maash

2020 இற்குள் 15,000 கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி திட்டம்

wpengine