பிரதான செய்திகள்

கிளிநொச்சி முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு ஆயுதம் தரித்தத இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கு மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 வது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியுமே இவ் பாதுகாப்பு இன்று (08) காலை முதல் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியின் கரைச்சிப் பகுதியில் அமைந்துள்ள இவ் ஐந்து பள்ளிவாசல்களையும் கரைச்சியில் உள்ள 249 முஸ்லிம் குடும்பங்கள் வழிபாட்டிற்காக பாவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார், பள்ளமடு நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவினை திறந்து வைத்த குணசீலன், நியாஸ்

wpengine

கிராம சேவையாளர் மீது இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டு ! கைது

wpengine

திருகோணமலை காணி,பள்ளிவாசல் தொடர்பாக மஹ்ரூப் பேச்சுவார்த்தை

wpengine