கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையின் நுழைவாயிலை மூடி இன்று செவ்வாய்க்கிழமை (01) கவனியீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முழங்காவில் ஆரம்ப பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்கள் மீது சமூக வலைத்தளம் ஊடாக அவதூறு பரப்பி வருவதன் காரணமாக குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் முழங்காவில் பொலிஸ் நிலையம் மற்றும் கல்வி திணைக்களம் ஆகியவற்றில் முறைப்பாடளித்துள்ளனர்.
முறைப்பாடளித்தும் இதுவரை எந்தவித தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக குறித்த பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.