கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான விவசாய குழுக் கூட்டம் இன்று (19) காலை 9.30மணிக்கு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.
பயிரழிவு மதிப்பீடு தொடர்பான பிரச்சினைகள், பூச்சித் தாக்கங்கள், துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி)பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர்,நீர்ப்பாசன பொறியியலாளர்,கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஊடகப் பிரிவு,
மாவட்ட செயலகம்,
கிளிநொச்சி.