கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்ற புதுவருட நிகழ்வு!

பிறந்துள்ள விசுவாவசு தமிழ் சிங்கள புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் புதுவருட நிகழ்வுகள் இன்று(15) காலை 9.00 மணிக்கு சிறப்புற நடைபெற்றன.

குறித்த நிகழ்வுகள் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், ஊழியர் நலன்புரி சங்க தலைவர் த.ராமபிரியந்தன் தலைமையில் நடைபெற்றன.

முதல் நிகழ்வாக கைவிசேடம் வழங்கும் புண்ணிய நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில் கயிறிலுத்தல், யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல்,தேசிக்காய் கொண்டு ஓடுதல், சங்கீதக் கதிரை முதலிய விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாவட்ட ஊடகப் பிரிவு,

மாவட்ட செயலகம்,

கிளிநொச்சி.

Related posts

பொருளாதாரப் பிரச்சினைகளால் இன்று அதிகமானோர் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளைப் பயன்பாடு

wpengine

25 வயது இளைஞரின் காதலி வழக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை

wpengine

யோகட் நிலையத்தை திறந்து வைத்த அமீர் அலி

wpengine