கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கிளிநொச்சி காவல் சிரைகூட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் மரணம்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 65 வயதுடைய நான்கு பிள்ளையின் தந்தை ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெள்ளிக்கிழமை (25) நன்பகல் குடும்பத் தகராறு காரணமாக மகளை தாக்கியதாக குற்றம் சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் குறித்த நபரை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயதுடைய இரத்தினம் ராயு என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையாவர் சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஜமீல் அவர்கள் சம்பவத்தை நேரில் பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சாய்ந்தமருது விடயத்தில் அமைச்சர் றிஷாத் குற்றவாளியே!

wpengine

பாயீத் விடுதியின் சேவைகளை பாராட்டிய மாவட்ட LIONS CLUBS ஆளுனர்

wpengine

மஹிந்தவின் உண்மைகள்! மைத்திரிபால பகிரங்கப்படுத்த வேண்டும்- அநுர திஸாநாயக்க

wpengine