பிரதான செய்திகள்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகம் நீரில் முழ்கியுள்ளது

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகம் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ஆவணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன் இரணைமடு குளத்தினுடைய வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் கனகராயன் ஆற்றுப்படுக்கை அண்டிய கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்தநிலையில் நேற்று பிற்பகல 1.00 மணியளவில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குள் வெள்ளநீர் புகுந்து கொண்டதால் அங்கிருந்த உத்தியோகத்தர்களும், ஒரு சில ஆவணங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றும் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பிரதேச செயலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

அசுத்தமான நீரை குடிநீராக மாற்றும் நிகழ்வு! நிராகரிக்கப்பட்ட ஹக்கீம்

wpengine

குடிநீர் போத்தல் தொடர்பில் புதுச் சட்டம்

wpengine

50 ஆண்டுகளாக காணி உறுதிப்பத்திரம் தராமல் இழுத்தடிக்கப்படுகின்றதென வவுனியா மக்கள் றிசாத்திடம் அங்கலாய்ப்பு.

wpengine