கிளிநொச்சி (Kilinochchi) – இரணைதீவு கடற்பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் படகில் இருந்து தவறி விழுந்துஉயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (16.04.2025) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி – முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமாதா நகர் கிராமத்தில் இருந்து இரணைதீவு கடற்பகுதிக்கு கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இளைஞன் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் நேற்று பகல் 10 மணியளவில் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டு உறவினரிடம் இரவு கையளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் பொலிஸ் முன்னெடுத்து வருகின்றனர்.