தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் கிளிநொச்சி பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 77.605 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்று (16) மாலை தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் கிளிநொச்சி பொலிஸ் விசேட படையுடன் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் வாகனமொன்றில் மறைத்து வைத்திருந்த 77 கிலோ 605 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருளை கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் ரூ. 15 மில்லியன் பெறுமதியான 40 பொதிகளில் அடைக்கப்பட்ட கேரள கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்வதற்காக பிரத்தியேகமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனமொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ப்பட்டு வருகின்றது.