பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளை

கிளிநொச்சியில் பெண் ஒருவரை கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி அம்பாள்குளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பூநகரியில் உள்ள ஒருவ­ருக்கு வழங்க வேண்டிய பணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்­றுள்ளார். அவரைத் திடீரென வழிமறித்த இருவர் அவரிடம் இருந்து பணப் பையைப் பறிக்க முயன்றுள்ளனர். அவர் அதைத் தடுக்க முயன்றபோது கத்தியால் குத்தி­விட்டு பணத்தை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் 19 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளதாக பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

வயிற்றுப் பகுதியில் இரு தடவைகள் கத்­தியால் குத்திவிட்டு, கொள்ளையிட்டவர்­கள் கத்தியை அவரது வயிற்றில் சொருகியவாறு விட்டு தப்பிச் சென்­றுள்ளனர்.

வயிற்றில் கத்தி குத்தப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து கிடந்த பெண்ணை அந்­தப் பகுதியால் வந்த மீன் வியாபாரி ஒரு­வர் அவதானித்துள்ளார். அவர் உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கும், பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்­ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட பெண்ணை கிளி­நொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசா­ரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை இரத்து

wpengine

GCE O/L பரீட்சையை நிறுத்தி உயர்தரம் கற்கும் வாய்ப்பை வழங்குங்கள்!-பாராளுமன்றில் டலஸ்-

Editor

இந்தியா, பிலிபைன்ஸ் மற்றும் வியட்நாமிலிருந்து தேங்காய் இறக்குமதி

wpengine