செய்திகள்பிரதான செய்திகள்

கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு, ஒருவர் கைது .  

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை (18) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூடு நடத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தேவாலயத்தின் மத போதகர் உடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி சூட்டின்போது உள்ளே எவரும் இருக்கவில்லை என்றும், தேவாலயகத்தின் யன்னல்களின் கண்ணாடிகள் மீதே துப்பாக்கி ரவைகள் பாய்ந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹக்கீமிடமிருந்து மீட்பதற்கான செயல் திட்டம்தான்! கிழக்கின் எழுர்ச்சி

wpengine

பிரபாகரன் விவகாரம் குறித்தும் விசாரணை – பாது­காப்பு இரா­ஜங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன

wpengine

”உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது.” குவைதிர்கானுக்கும் இது புரிய வேண்டும்.

wpengine