பிரதான செய்திகள்

கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக எல்லைக்குள் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டியணிந்து பிரதேச செயலகத்திற்கு முன்னால் இவ்வாறு தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கே.தனபாலரெத்தினத்திடம் கிராம சேவை அதிகாரிகளினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Related posts

நாய்களுக்கு கருத்தடையுடன் காப்பகம் அமைக்க, சாவகச்சேரி நகரசபை ஏகமனதாகத் தீர்மானம்…!!!!

Maash

இ-பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை .!

Maash

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்! 40 பேர் சஜித்துக்கு ஆதரவு

wpengine