பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

“கிராமத்து பொலிஸ்” நடமாடும் சேவை இன்று மன்னாரில்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்தோட்டம் கிராமத்தில் பொலிஸ் நடமாடும் சேவையினை வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்றிகோ தலைமையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்தோட்டம் சன சமூக நிலையத்தில் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘கிராமத்து பொலிஸ்’ எனும் கருப்பொருளில் பொலிஸ் நடமாடும் சேவை இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நடமாடும் சேவை இன்று தொடக்கம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

குறித்த பொலிஸ் நடமாடும் சேவையின் மூலம் மன்னார் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராபுரம் கிழக்கு, தாராபுரம் மேற்கு, தாழ்வுப்பாடு, எழுத்தூர் மற்றும் கீரி மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய ஐந்து கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ள வேண்டிய சகல சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நடமாடும் சேவையினூடாக கிராமங்களில் சமயம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் உரிய பலனை பெற்றுக்கொள்ள முடியும் என மன்னார் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி அஜந்த றொட்றிகோ தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் நடமாடும் சேவையினூடாக 24 மணிநேர சேவையின் மூலம் தமது அவசர தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதற்கு இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இடம்பெறும்.

குறித்த நமாடும் சேவையினூடாக ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்களை பூரண பயனடையுமாறு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்றிகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

வவுனியாவில் உலர் உணவு பொதிகள் வினியோகம்

wpengine

மன்னார், முசலி பிரதேச பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு உபகரணம் வழங்கிய நியாஸ்

wpengine

அடுத்து வரும் 5 நாட்கள் மிகவும் ஆபத்தான காலப்பகுதி சவேந்திர சில்வா

wpengine