பிரதான செய்திகள்

கிண்ணியா துறையடியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற சட்ட விரோத கட்டடிடத்தை நிறுத்தும்படி அரசாங்க அதிபர் உத்தரவு

திருமலை மாவட்டத்தின், கிண்ணியாவின் புதிய நீண்ட பாலம் நிர்மாணிப்பதற்கு முன் பிரதேச மக்கள் கிண்ணியா துறையடியினூடாக படகு சேவையை (பாதை) பயன்படுத்தி கொள்வதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இடத்தில் கடந்த சில வாரங்களாக சட்ட விரோதமான முறையில் கட்டிடம் ஒன்று புத்தர் சிலை வைக்கும் நோக்கில்  நிர்மாணிக்கப்பட்டு வந்தது.

குறித்த அனுமதி பெறப்படாத வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் சட்ட விரோதமாக கட்டிடம் அமைக்கப்படுவதாக திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் 15.12.2016ஆந்திகதி நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக முன் வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் குறித்த கட்டிடம் தொடர்பாக அரசாங்க அதிபரை நோக்கி இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சமூக ஒற்றுமைக்கு மத்தியில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வது பொருத்தமற்றது எனவும், கிண்ணியா வீதியில் அமைந்துள்ள வரவேற்பு கோபுரத்தில் முஸ்லிம்களின் கலாச்சார சின்னங்கள் பிரதி பளிக்கக்கூடாது எனவும் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது நியாயமாக இருந்தால் குறித்த சட்ட விரோத சிலை வைப்பு எந்த விதத்தில் நியாயமானது என்று கேள்வி எழுப்பினார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான  வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியலாளரை நோக்கி குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வேண்டியதை அடுத்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரால் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சீனக்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணிபு்புறை விடுத்து சட்ட விரோத கட்டிடத்தை உடன் நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

Related posts

சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு மஹிந்த ஆலோசனை

wpengine

UpDate பிரதமர் மஹிந்த கடிதம்! ஜனாதிபதி அதை ஏற்கவில்லை என அரசியல் வட்டம்

wpengine

இறக்கை உடைந்த மூதூர் இரத்த உறவுகள்!???

wpengine