பிரதான செய்திகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு.! யாழில் சோகம்.

யாழ்ப்பாணம், அச்சுவேலி, தோப்பு பகுதியில் கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் நேற்று (26) மாலை 4:30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

பிரதீபன் தச்ஷன் (வயது 10), அரசடி, தோப்பு பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது பாட்டனுடன் கிணற்றில் நீர் இறைப்பதற்காக தோட்டத்துக்குச் சென்றுள்ளார். இதன்போது, பாட்டன் நீர் இறைத்துக் கொண்டிருந்தபோது, சிறுவன் கிணற்றில் கலர் மீன்களைப் பிடிக்க முயற்சித்ததாகத் தெரிகிறது.

இதன்போது, சிறுவன் வாளியை கிணற்றில் இறக்கிய போது கயிற்றில் கால் சிக்கி, கிணற்றுக்குள் விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிணற்றில் அதிகளவு நீர் நிறைந்து காணப்பட்டமையால் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறுவனின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய உர மானியம் இன்று முதல் அமுல்

wpengine

வவுனியாவில் ஆக்கிரமித்த காணிகளை பெற்றுக்கொண்ட கமநல திணைக்களம்

wpengine

பொது எதிரணியினை திருப்திபடுத்தும் திறைமறைவிலான முயற்சிக்கு துணைபோய்விட வேண்டாம்.

wpengine