உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராகிறார் சல்மான் கான்

காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் நேற்று மும்பையில் நிகழ்சிகள் நடத்தப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்மந்திரி மெகபூபா முப்தி பங்கேற்றார்.

அப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முப்தியிடம், ”காஷ்மீர் சுற்றுலா தூதராக பாலிவுட் நடிகர்களை பயன்படுத்த விருப்பமா? ”என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , ”நடிகைகள் அலியாபட் மற்றும் கான் சகோதர்கள் (ஆமீர் கான், ஷாருக் கான், சல்மான் கான்) ஆகியோர்களை நியமிக்க யோசனை இருக்கிறது” என பதிலளித்தார்.

”ஒருவரை மட்டும் நியமிக்க வேண்டுமானால் யாரை தேர்வு செய்வீர்கள்?” எனக் கேட்டதற்கு,” சல்மான் கான் தான் என்னுடைய தேர்வாக இருக்கும்” எனப் பதிலளித்தார்.

கடந்தாண்டு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதி புர்கான் வாணி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு இன்று வரை இயல்பு நிலை திரும்பவில்லை.

எனவே, அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இது போன்று நடிகர்களை சுற்றுலா தூதர்களாக நியமிக்கும் பட்சத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

“டயஸ் போராவின் கீழ் இயங்கும் ஹக்கீமுடன் இணைந்திருக்க முடியாது” ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார் ஜவாத்.

wpengine

யானை, மனித மோதல் மிகவும் உக்கிரமடைந்த நிலையில் பொன்சேகா

wpengine

வடமாகாண மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? விக்னேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடு

wpengine