உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் மக்களின் விருப்பம் நிறைவேறும்! தொடர்ந்து ஆதரவு நவாஸ் ஷெரீப்

காஷ்மீர் மக்களின் விருப்பம் நிறைவேறும் வரை அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் கூறினார்.

‘தியாகத் திருநாள்’ என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் லாகூரில் உள்ள தனது ரைவிண்ட் இல்லத்தில் உள்ள மசூதியில் குடும்பத்தினருடன் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார்.

தியாகத் திருநாளையொட்டி அவர் வெளியிட்ட செய்தியில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக காஷ்மீரீல் 3-வது தலைமுறையாக மக்கள் போராட்டங்களை சந்தித்து தங்களை தியாகம் செய்து கொண்டு வருகின்றனர். தங்களுடைய சுய உரிமைகளுக்காக அவர்கள் இந்தியாவின் அட்டூழியங்களை எதிர்த்து போராடுகின்றனர்.

காஷ்மீர் மக்களின் இந்த தியாகங்களை நம்மால் புறக்கணித்து விட முடியாது. தங்களது தியாகங்கள் மூலம் அவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த தியாகத் திருநாளை காஷ்மீர் மக்களுக்காக அர்ப்பணிக்கிறோம்.

காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படாதவரை அவர்களுக்கு பாகிஸ்தான் தனது ஆதரவை தொடர்ந்து அளிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னுன் ஹூசைன் விடுத்த செய்தியில் “இந்த தருணத்தில் காஷ்மீர் மக்களுக்கு நமது ஆதரவு தேவை. தங்களின் போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெறும் நாள் வெகுதூரம் இல்லை. காஷ்மீர் மக்கள் இதுபோன்ற பண்டிகைகளை விரைவில் தங்களுடைய சுதந்திர மண்ணில் கொண்டாடுவார்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத்-தவா அமைப்பின் தலைவரும், லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் இணை நிறுவனருமான ஹபீஸ் சயீத், லாகூர் கடாபி மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். அப்போது இந்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராடும் காஷ்மீர் மக்கள் வெற்றி பெறவேண்டும் என்று அவர் வேண்டிக் கொண்டார்.

Related posts

கொலன்னாவ குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் 750 உணவு பொதிகள் வினியோகம்

wpengine

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற பெயரில் ஞானசார தேரருடன் கூட்டு சேர்ந்த முஷ்ரப்

wpengine

தமிழர்களும், முஸ்லிம்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து பொது விடயங்களில் ஒன்றுபடுமாறு அமைச்சர் றிஷாட் அழைப்பு

wpengine