பிரதான செய்திகள்

காஷ்மீர் பதற்றமான சூழலை தொடர்ந்து கண்காணிக்கும்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து கண்காணிக்கும் என்று பான் -கீ-மூன் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானியும், அவரது ஆதரவாளர்களும் கடந்த மாதம் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த வன்முறை மற்றும் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 45-க்கும் அதிகமானோர் பலியானார்கள். பலர் காயம் அடைந்து உள்ளனர்.  இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து கண்காணிக்கும் என்று பான் -கீ-மூன் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளரின் கேள்விக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் -கி-மூனின் செய்தி தொடர்பாளர் பர்கன் ஹாக் கூறியதாவது:-

இந்த விவகாரத்தில் பிரச்சனைகளை தீர்க்க இந்தியாவும், பாகிஸ்தானும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலை ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவ கண்காணிப்பாளர்கள் குழு தொடர்ந்து கண்காணிக்கும். ஐ.நா. மனித உரிமைகள் இந்திய படைகளால் மீறப்பட்டால் சர்வதேச அமைப்புகள் அங்கு பணிபுரியும். இவ்வாறு கூறினார்.

Related posts

மருதானை ஜும்ஆப்பள்ளிக்கு சூரிய மின்சக்தி இணைப்பு

wpengine

முசலி பிரதேச சபையின் Finger Print Machine எப்படி மாயமானது?

wpengine

அரசு வெகுவிரைவில் கவிழும் என்பதேயே நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.

wpengine