உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் பகுதிகளை மீட்க வேண்டிய நேரம் இது! மோடிக்கு பாபா ராம்தேவ் வேண்டுகோள்!

காஷ்மீர் பகுதிகளை மீட்க வலுவான நேரம் இது.எனவே, பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்தியா மீட்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதிகளை மீட்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானிடமிருந்து அந்த பகுதிகளை விடுவித்து மீட்டெடுக்க பிரதமர் மோடி பிரச்சாரத்தை துவங்க வேண்டும். என்ன தைரியத்தில் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்போம் என நவாஸ் ெஷரிப் சொல்கிறார் என எனக்கு தெரியவில்லை.

நமது குழந்தைகள் காஷ்மீரை வரைபடத்தில் மட்டுமே பார்த்திருக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்து விட்டது. ஒரு கோழை நாடு வலிமை வாய்ந்த நம் நாட்டின் பகுதியை கைப்பற்ற நினைக்கும் போது நாம் இங்கே சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது என்றார்.

Related posts

வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு!மக்கள் விசனம்

wpengine

யாழ் 10 குழாய் நீர் கிணறுகள் அமைக்க ஹிஸ்புல்லாஹ் நிதி உதவி

wpengine

“காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் ஆபத்து என்கிறார்” மஹிந்த

wpengine