உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீரில் போராட்டக்கார்களை கட்டுபடுத்த மிளகாய் குண்டு- ராஜ்நாத் சிங்

காஷ்மீர் மாநிலத்தில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ரவை குண்டுகளுக்கு பதிலாக மிளகாய்ப் பொடி குண்டுகளை பயன்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று(03-09-16) ஒப்புதல் அளித்தார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த ரவை குண்டுகள் பயன்படுத்தப்பட்ட போது ஏராளமானோரின் கண் பார்வை பறிபோனது. இப் புகாரை அடுத்து. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் பிரசாத் தலைமையில் 7 பேர் கொண்ட உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு, மத்திய அரசிடம் கடந்த மாதம் 29-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், மிளகாய்ப் பொடி குண்டுகளை பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. இதுதொடர்பான கோப்புகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ஒப்புதலை அளித்தார்.

இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு ஆயிரம் மிளகாய் பொடி குண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை காஷ்மீரை ஞாயிற்றுக்கிழமை இன்று சென்றடையும் என்றார் அந்த அதிகாரி.

Related posts

Rishad’s wife writes to the President

wpengine

கட்சியினர் எவருக்காது சிறு கீறல் சேதத்தை ஏற்படுத்தினாலும் அரசு பொறுப்பு

wpengine

அரிப்பு குடிநீரை திறந்து வைத்த அமைச்சர் ஹக்கீம்! சில இடங்களில் இயங்கவில்லை மக்கள் குற்றச்சாட்டு

wpengine