20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டாகோகம’யில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் அவர்களின் புகைப்படத்தை ஒட்டி போராட்டக்காரர்கள் தமது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசுக்கு எதிராக நாடு பூராகவும் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் காலிமுகத்திடலில் தொடர்ந்து ஆறு நாட்களாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிலும் புதுவருட தினமான இன்றும் சர்வமத மக்களும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது படங்கள் ஒட்டப்பட்டுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களே இவ்வாறு ஒட்டபட்டுள்ளன.



