உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கார் ஒட்டும் போது குறுந்தகவல் செய்த சோதனை

பிரான்சில் நின்று கொண்டிருந்த பொலிஸ் வாகனத்தின் மீது, நபர் ஒருவர் காரை மோதிய விபத்தில் பொலிசார் இருவர் காயமடைந்தனர்.

பிரான்சின் Bretagne நகரில் கடந்த வியாழக்கிழமை, நபர் ஒருவர் நின்று கொண்டிருந்த பொலிஸ் காரின் மீது தனது காரை மோதி விபத்து ஏற்படுத்தினார்.

இதில் இரண்டு கார்களும் சேதமடைந்ததுடன், பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், குறித்த நபர் தனது கைப்பேசியில் குறுந்தகவல் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தவாறே கார் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் அவர் மது அருந்தியிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அஷார்தீனின் முயற்சியினால் சுகாதார சேவை மையம்!

wpengine

’பீஸ்’ டி.வி (Peace Tv) இந்தியாவில் சட்டவிரோத ஒளிபரப்பு – வெங்கையா நாயுடு

wpengine

தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் எந்த ஒரு அரச ஊழியரையும் கைது செய்ய இடமளிக்க மாட்டேன்

wpengine