பிரதான செய்திகள்

காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு அடுக்கு மாடி வீடு

கொழும்பு நகரில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 7400 வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரின் 12 இடங்களில் இந்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளில் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 3000 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகள் எதிர்வரும் ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 19,000 வீடுகள் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட புள்ளிவிபர ஆய்வுகளின் பிரகாரம், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் குடிசைகளில் வாழ்கின்றமை கண்டறியப்பட்டது.

இவர்களுக்கு வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

சட்ட நடவடிக்கை எடுப்பதட்குள் மகிந்த வீட்டை விட்டு வெளியேறினால் சிறப்பு. கடிதம்தான் வேண்டுமெனில் அதுவும் அனுப்பிவைக்கப்படும்”

Maash

என்னிடம் வடக்கு- தெற்கு என்ற பாகுபாடு அதிகாரப்பகிர்வை வழங்குவேன்

wpengine