Breaking
Sun. Nov 24th, 2024

கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் ஆளணி பற்றாக்குறை என்கின்ற விடயம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. இதனை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அந்த வகையில் காத்தான்குடி தள வைத்தியசாலையினுடைய இன்றைய நிலவரத்தினை சுட்டிக்காட்ட வேண்டிய தேவைப்பாடும் எனக்கு இருக்கின்றது. அதிலும் ஆளணி விடயத்தில் பெரும் அநீதி இழைக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில் மிகவும் பாரபட்சத்தொடு இவ்வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு பத்து விடயங்களை ஆவணங்களாக சுகாதார அமைச்சருக்கு ஆதாரத்துடன் நிறூபிப்பதற்குரிய தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சில விடயங்களை சொல்ல வேண்டுமாக இருந்தால் தாதியர், சிற்றூழியர் மற்றும் காவலாளி போன்ற விடயங்கள் என்பனவற்றை தொடர்ச்சியாக அடிக்கொண்டே செல்லலாம்.

அதிலும் மிக துரதிஸ்டவசமான விடயமாக கிழக்கு மாகாண சபையினூடாக மாகாணத்திற்கு கொண்டுவரப்படுகின்ற நிதிகள் போதாமையினால் மத்திய அரசுனூடாக 2016.05.16ஆந்திகதி காத்தான்குடி வைத்தியசாலைக்கு DDG நிதி, மட்டக்களப்பு RDHS மற்றும் காத்தான்குடி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ஆகிகோருக்கு மத்திய சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் ஒரு கோடியே ஒரு இலட்சத்து தொண்ணூற்றி இரண்டாயிரம் ரூபா நிதியை ஒதிக்கியிருப்பதாகும் அதற்குரிய வேலைகளை ஆரம்பிக்குமாறும் கடிதத்தில் சுட்டிக்காட்டிருந்த போதிலும் எனக்கு நேற்று கிடைக்கப்பெற்ற மாகாண திட்டமிடல் பிரிவினுடைய கடிதத்தில் வெறுமெனே ஐம்பத்தி இரண்டு இலட்சம் ரூபா மாத்திரமே செலவு செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக எங்களுக்கு பணங்கள் கிடைக்கவில்லை என்பதற்கு 5ஆம் மாதம் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு டிசம்பர் மாதம் பதில் அனுப்பப்பட்ட விடயத்தினை சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது எங்களுக்கு இதனை முன்கூட்டி செய்வதற்குரிய நேர அவகாசம் கிடைக்கவில்லை என்று பதில் சொல்லுகின்றார். இவ்வாறான விடயங்களில் சுகாதார அமைச்சர் என்கின்ற வகையில் தாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், காத்தான்குடி வைத்தியசாலையை பொறுத்தமட்டில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதிகளுக்கப்பால் சென்று கிட்டத்தட்ட ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா நிதியினை பொதுமக்கள் வழங்கி இருக்கின்றார்கள். இவ்வாறு மாகாண சபையினால் எங்களுக்கு இவ்வைத்தியசாலைக்குரிய ஆளணிகளை வழங்கவோ நிதிகளை செலவு செய்யவோ முடியாது என்றிருந்தால் 13ஆம் திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று சொல்கின்ற நாங்கள் அத்தகைய 13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் எங்களுக்கு உள்ள அதிகாரங்களை விட்டுக்கொடுக்க கூடாது என்றிருந்தால் மாகாண சபைகள் தமது அதிகாரங்களை பாகுபாடின்றி செயற்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் காத்தான்குடி தள வைத்தியசாலையினை கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்திலிருந்து உடனடியாக விடுவித்து அதனை மத்திய அரசின் நிருவாகத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் மக்களுக்கு பயனளிக்கக் கூடிய வைத்தியசாலையாக காத்தான்குடி தள வைத்தியசாலையினை மாற்றியமைக்க வேண்டும்.

அவ்வாறு விடுவிக்கப்பட்டு மத்திய அரசாங்கள் எங்களுடைய வைத்தியசாலையை பொறுப்பெடுப்பதற்கு விரும்பவில்லை என்றால் மக்கள் போராட்டத்தினூடாக நாங்கள் அவ்வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் உழ்வாங்கச்செய்வோம்.

எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடத்து மக்கள் போராட்த்தினை நான் முன்நின்று நடாத்துவேன் என்பதனை தெரிவித்துக்கொள்வதோடு, இப்போராட்டத்தின் மூலமாவது மக்களுக்கு நல்லதொரு விடிவுகாலம் கிடைக்குமென்று நான் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். என தனது சபை உரையின்போது தெரிவித்தார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *