(பழுலுல்லாஹ் பர்ஹான்)
1982ம், ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு மூலம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வெளியாகியுள்ளனர். தமது பெற்றோர்களை இழந்து, வறுமையின் பிடியில் வாழும் சிறுவர்களை பொறுப்பெடுத்து அவர்களுக்கான அடிப்படை தேவைகள் அனைத்தும் வழங்கப்பட்டு சமூகத்தில் ஒரு சிறந்த, நல்லொழுக்கமுள்ள பிரஜையாக மாற்றுவதே இந்த அமைப்பின் இலக்காகும்.
இவ்வாறு நீண்ட காலமாக சமூக நன்மையை மாத்திரம் இலக்காகக்கொண்டு இயங்கும் இந்த அமைப்பு இதுவரை அதிலிருந்து பயனடைந்து வெளியாகிய மாணவர்கள் மூலம் எதனை பெற்றுக்கொண்டது, என்றால் அது வெறும் விடையற்ற கேள்விக்குறியாகவே உள்ளது. முடிவற்ற பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வைமைப்பில் பழைய மாணவர் சங்கம் என்ற ஒரு அமைப்பு இல்லாதது ஒரு கவலைக்குரிய விடயமே.
ஒரு வீட்டில் குடியிருப்பவனுக்குதான் அந்த வீட்டின் குறைகளும், நிறைகளும் தெரியும். அதே போன்று அந்த அமைப்பை எவ்வாறு சிறப்பாக கொண்டு செல்ல முடியும், இந்த அமைப்புக்குரிய உதவிகளை எவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியும், மாணவர்களுக்கு தேவையானது எது, அவர்களது எதிர்காலத்தை எவ்வாறு பிரகசமனதாக மாற்றுவது, போன்ற ஒவ்வொரு விடயங்களும் அதிலிருந்து கல்வி கற்ற மாணவர்ளுக்கே தெரியும்.
இன்று இந்த அமைப்பு எந்த வித உதவியுமற்று, மிகவும் சிரமத்திற்கு மத்தியில் சுமார் அறுபது மாணவர்களுடன் இயங்கி வருகின்றது. எனவே இந்த அமைப்பை சிறப்பாக முன் கொண்டு செல்வதற்கும், அந்த மாணவர்களின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு, பழைய மாணவர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஒன்று கூடலில் காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் இல்லம் (அனாதைகள் இல்லம்) இருந்து வெளியாகிய அனைத்து மாணவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
காலம் : 04.09.2016,
நேரம் : பி.ப. 3.45 தொடக்கம் பி.ப. 6.45 வரை
இடம் :முஸ்லிம் சிறுவர் இல்லம், காத்தான்குடி-01.
தொடர்புகளுக்கு :
அஷீபர் மௌலவி – 075 8064976
ஹுசைனுதீன் மௌலவி – 075 0156014
ஹனீபா ஹாபீஸ் – 077 3465558
றாபி – 077 2736637