Breaking
Sun. Nov 24th, 2024
எம்.ரீ. ஹைதர் அலி
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் பூரண முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முற்றுமுழுதாக காபெட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்ட காத்தான்குடி தெற்கு எல்லை வீதி இன்று (2017.11.26ஆந்திகதி) கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ. ரோஹித்த போகொல்லாகமவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் கௌரவ. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் கௌரவ. ஷிப்லி பாறூக், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு இவ்வீதியினை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.

இப்புனரமைப்பு பணிகளுக்காக மாகாண சபையினூடாக சுமார் 85 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நடும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் கலந்துகொண்டு இவ்வீதி புணரமைப்புக்கான வேலைத்திட்டங்களை 2017.09.06ஆந்திகதி ஆரம்பித்து வைத்தனர்.

காத்தான்குடி, ஆரயம்பதி ஆகிய இரு நகரங்களுக்கான எல்லை வீதியான இவ்வீதியானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதானமான வீதிகளில் ஒன்றாகும். இவ்வீதி மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டமையினால் இவ்வீதியினைப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

பொதுமக்களின் நன்மைகருதி இவ்வீதியினை புனரமைப்பு செய்து வழங்க வேண்டுமென்ற நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண சபையின் சுமார் 85 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தற்போது இவ்வீதியானது முற்றுமுழுதாக காபட் வீதியாக புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் காத்தான்குடி, ஆரயம்பதி ஆகிய நகரங்களை அடுத்துள்ள ஏனைய பிரதேசங்களுக்கான போக்குவரத்து மேலும் இலகுபடுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புனரமைப்புச் செய்யப்பட்ட காத்தான்குடி தெற்கு எல்லை வீதியின் இறுதிகட்ட பணிகளை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் 2017.10.07ஆந்திகதி நேரில் சென்று பார்வையிட்டதுடன், மிகவும் துரித கதியில் இவ்வீதியினை காபட் வீதியாக புனரமைப்பு செய்து கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ. ரோஹித்த போகொல்லாகமவினால் திறந்து வைக்கப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக வழங்கியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *