பிரதான செய்திகள்

காத்தான்குடி, ஏறாவூர் அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் வெள்ளியன்று

காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ளது.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா, சிறிநேசன் மற்றும் பிரதெச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதேவேளை, வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணிக்கு ஏறாவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏறாவூர் பிரதேசத்துக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா, வியாழேந்திரன் மற்றும் ஏறாவூர் பிரதேச செயலாளர் மொஹமட் ஹனீபா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

நல்லாட்சி அரசு என்பது வெறும் வாய்ப்பேச்சில் மாத்திரமே! வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

இலங்கையில் பேஸ்புக் பாவனை அதிகரிப்பு-பேராசியர் லோஷந்தக ரணதுங்க

wpengine

மனைவியினை தாக்கிய கணவன்! விளக்கமறியல்

wpengine