பிரதான செய்திகள்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று 22-08-2016 திங்கட்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளரும்,மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக நட்டி வைத்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்திசாலையின் பல்வேறு பிரிவுகளின் வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள்,உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழு பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டனர்.unnamed (5)

குறித்த தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளை நிர்மாணிப்பதற்கும்,அதற்கான சகல வைத்திய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனம் சுமார் 100 மில்லியன் (10கோடி) ரூபாவை ஓதுக்கீடு செய்துள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவித்தார்.unnamed (8)

Related posts

வட மாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப்பின் நேற்றைய அமர்வின் (வீடியோ)

wpengine

யாழ் அல்லைப்பிட்டியில் கோர விபத்து 2 பெண்கள் ஸ்தலத்தில் பலி!

Editor

அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் வலுவான அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கும்

wpengine