பிரதான செய்திகள்

காதலால் வந்த வினை; தொலைபேசியில் வாய்தர்க்கம் உயிரை இழந்த அப்துல் அலி

பெண் ஒருவர் மீதான காதலால் இரு இளைஞர்களுக்கிடையே கையடக்க தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து 22 வயது இளைஞர் ஒருவர் ஸ்க்ரூடிரைவரால் (திருப்புளி) குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது.

இதில் சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.

சம்மாந்துறை சென்னல் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சுலைமான் லெப்பை அப்துல் அலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரை காதல் செய்துவரும் இருவருக்கு இடையில் கையடக்க தொலைபேசியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவதினமான நேற்று இரவு 9.00 மணியளவில் நண்பர்கள் இருவருடன், உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று அவரின் நெஞ்சுப்பகுதியல் ஸ்கூட்டுறைவரால் குத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து சந்தேகநபர்கள் மூவரும் தப்பி ஓடியுள்ளதுடன், படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொலிஸ் திணைக்களத்தின் நோன்பு திறக்கும் நிகழ்வு

wpengine

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அமைச்சர் ரிஷாட்டின் பத்திரம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

wpengine

மு.கா கட்சியின் பிரதி அமைச்சர் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தொடர் அழுத்தம்

wpengine