பிரதான செய்திகள்

காணி மோசடி! வாழைச்சேனை பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளிப்பு

(அனா)

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயத்துக்குச் சொந்தமான காணி மோசடி செய்யப்பட்டமை தொடர்பான ஆட்சேபனையும், அதனை எமக்கு மீட்டுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரும்; பிரேரனை மகஜர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கும் முகமாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் வ.வாசுதேவனிடம் ஆலய நிருவாகத்தால் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது!
மேற்படி எமது ஆலயமானது மிகப்பழமை வாய்ந்த இப் பிரதேசத்தின் தாய்க் கோவிலாகவும் திகழும் ஓர் புனிதத் தலமாகும். இத்தகைய ஆலயத்திற்கு ஆரம்ப காலத்தில் பல சொத்துக்;கள் இருந்துள்ளது. அக்காலத்தில் நிலவிய யுத்த சூழ்நிலையால் இராணுவத்தினர் முகாம் அமைத்திருந்தனர். அதனால் இக்காணியை சோர்ந்து விட்டது. ஆனால் அழிக்க முடியாத பூர்வீக சொத்தாக இருந்த மருங்கையடிபூவல் வளவு அதாவது தற்போது வாழைச்சேனை பிரதான வீதியில் (வாழைச்சேனை பழைய பேருந்து தரிப்பு நிலையத்துக்கு முன்பாக உள்ள காணி) இந்தக் காணியானது மோசடியான முறையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டது.

பின்னர் அது முறையற்ற விதத்தில் மாறிமாறி பலரின் மோசடிச் சொத்தாக மாற்றப்பட்டு வந்துள்ளது. தற்போதய நிலையில் இன்று எமது ஆலயத்திற்கு சொந்தமான பொதுவுடமைக் காணியில் தனி நபர் ஒருவர் சட்டவிரோதமாக கட்டிடத்தினை கட்டி வருகின்றார். இதற்கு உடந்தையாக இருந்து குறித்த ஆலயத்தின் காணியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு ஆலயத்திற்கு மீண்டும் இக் காணியை மீட்டெடுக்கும் முயற்சியில் எமது பிரதேச சமூக நல அமைப்புக்கள் ஒன்றிணைந்து நீதிமன்ற தடை உத்தரவை வேண்டி நிற்கும் இக்கால கட்டத்தில் தற்போது எமது ஆலய வளாகத்தில் இடம்பெற்று வரும் அத்துமீறிய கட்டட நிர்மான வேலைகளை தடுத்து நிறுத்த பிரதேசசபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான தடையுத்தரவை பிரதேச சபை ஊடாக இரு தடவைகள் பிறப்பிக்குமாறு கோரி முறைப்பாடுகள் கொடுத்திருந்தோம். ஆனால் சிறிது காலம் தடுக்கப்பட்டிருந்த கட்டட வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

பிரதேச சபையும் இன்றுவரை பாராமுகம் காட்டியே வருகின்றது. துடையை பிறப்பித்து பின் அத்தடையை மீறியும் வேலைகளை ஆரம்பிக்க பிரதேசசபை அனுமதி வழங்கியது ஏன்? இச் செயற்பாடு எமது மதத்திற்கும், மக்களுக்கும் செய்ய நம்பிக்கைத் துரோகமாகவே நாம் கருதுகின்றோம்.

எனவே மாவட்டச் செயலாளர் என்ற ரீதியில் இங்கு எமக்கு நியாயம் கிடைக்காததால் தங்களிடம் எமது நியாயத்தை முன்வைக்கின்றோம். தாங்களாவது எமது ஆலயத்துக்குச் சொந்தமான காணியை மீட்டுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிரந்தாழ்த்தி வேண்டுகின்றோம்.

மேற்படி எமது ஆலயத்துக்குச் சொந்தமான காணியானது 1950ம் ஆண்டு ஆனி மாதம் 26ம் திகதி எழுதப்பட்ட உறுதியில் கணபதிப்பிள்ளை தங்கம்மா மற்றும் வ.கந்தையா ஆகியோரின் சீவியத்தின் பின் வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையாருக்கே இக்காணி சொந்தமாகி விட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அத்தோடு மேற்படி நபர்களால் இக் காணியில் வரும் வருமானங்களை மாத்திரமே பெற முடியும் எனவும் அதை பிறருக்கு விற்கவோ, நன்கொடையாக கொடுக்கவோ முடியாது எனவும் திடமாக கூறப்பட்டுள்ளது.

இந்தவகையில் யார் மோசடி செய்தாலும் இது எமது ஆலயத்திற்குச் சேர வேண்டிய சொத்;தே என்பதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே எமது ஆலயச் சொத்து எமக்கு வேண்டும். இதை ஈட்டித்தரும் பொறுப்பு தங்களுக்குரியது என்பதனை அறியத்தருவதோடு எமது ஆலயத்திற்கு சொந்தமான காணி எமக்கே சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள ஆவனை செய்யுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இதனடிப்படையில் எமது ஆலயத்திற்குச் சொந்தமான இக் காணியை மீட்டெடுப்பதற்கும் பொருட்டு குறித்த காலப்பகுதியில் இவ்வாலயத்தை பரிபாலனம் செய்த நிர்வாக சபையினரால் 2008ம் ஆண்டு தொடக்கம் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் பணப்பலம் காரணமாகவும் அக்காலச் சூழ்நிலை காரணமாகவும் உண்மைகள் யாவும் புதைக்கப்பட்டு உண்மையினை தட்டிக் கேட்கச் சென்ற அக்காலஎமது ஆலய நிர்வாகத்தினருக்கு தண்டனை தான் கிடைத்தது. அதன் விபரமும் அதற்குப் பின்புலமாக இருந்து எமது ஆலயத்திற்கு துரோகம் விளைவித்த சக்திகளின் தூண்டுதல்களும் வருமாறு.

1. 2008ம்ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாலயத்தை பரிபாலனம் செய்த நிர்வாக சபையினர் எமது ஆலயத்திற்குச் சொந்தமான இக்காணியை அறுக்கைபடுத்த வேலியிட்டனர். ஆனால் அதைபொறுக்க முடியாத இக் காணியை மோசடி செய்த மோசடிப் பேர் வழியில் வந்தவர் அன்றைய சூழலை காரணம் காட்டி அக்காலப் பகுதியில் இருந்த பொலிசாரினால் அவர்களை கைது செய்து கூண்டில் அடைத்தனர். இதன் பின்புலமாக ஓர் அரசியல்வாதியும் இருந்துள்ளார். இதனால் அச்சமடைந்தவர்கள் நியாயவழியில் முன்நிற்கப் பயந்தனர்.

2. இன்று எமது ஆலயத்திற்குச் சொந்தமான அழிக்க முடியாத பூர்வீக சொத்து மோசடிப் பேர் வழிகள் நால்வரின் பெயரில் அதாவது கண்ணப்பன் வாமதேவி, திருமதி.லலிதா நடேசமூர்த்தி, திருமதி.சுகிர்தம் நிர்மலகாந்தன், மக்றூப் முகமதுறபியுத்தீன், மக்றூப் முகமதுறமீஸ் ஆகியோரின் பெயரில் சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை எமது இந்து மதம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எனவே கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் அவர்கள் எமது மதம் எமக்குப் பெரிது! எமது சொத்து எமக்குப் பெரிது! அதைக் காப்பற்றி எம்மிடம் ஒப்படைப்பது அரச அதிகாரியான உங்களது பொறுப்பு எனவே பக்கச் சார்பாகவே தெரிகிறது. எமது ஆலய வளாகத்தினுள் இடம்பெற்று வரும் சட்டவிரோத கட்டட வேலைகளை நிறுத்தும் வகையில் தடை உத்தவு பிறப்பிக்குமாறு ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகம் சார்பாக மனமுருகி வேண்டி நிற்கின்றோம்.

இதன் பிரதிகள், உள்ளுராட்சிஉதவிஆணையாளர் – மட்டக்களப்பு. பிரதேச செயலாளர் ,பிரதேச செயலகம் ,கோறளைப்பற்று- வாழைச்சேனை, செயலாளர் ,பிரதேசசபை, கோறளைப்பற்று- வாழைச்சேனை, பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையம் – வாழைச்சேனை.

Related posts

சிறுபான்மையினரின் மதஸ்தளங்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்படுவதில் பாரபட்சம் அன்வர் தெரிவிப்பு

wpengine

பயங்கரவாத கால கட்டத்தின்போது அச்சுறுத்தலுக்கு மத்தியில் விற்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தல்

wpengine

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியில் 09 மாணவிகள் பரீட்சையில் சித்தி

wpengine