பிரதான செய்திகள்

காணியை சீனாவுக்கு தாரைவார்க்கட்டும்! அமைச்சர்களுக்கு ஓரு விதமான நோய்

அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் அனைவருக்கும் வாய் பேச முடியாத ஒரு விதமான நோய் ஏற்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் ஹம்பாந்தோட்டையில் சீனாவுக்கு கொடுக்கவிருக்கும் காணியின் அளவு குறித்து கேட்டால் ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமான கருத்தை முன்வைக்கின்றனர்.

இவர்கள் யாரும் தெளிவானதொரு பதிலை தெரிவிப்பதில்லை. அமைச்சர்களுக்கும் கருத்து ஒற்றுமை கிடையாது.

அரசாங்கம் எவ்வளவு காணியை வேண்டுமானால் சீனாவுக்கு தாரைவார்க்கட்டும். ஆனால் அனைவரும் ஒரே விதமான கருத்தை முன்வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

சட்ட ஒழுங்குகள் அமைச்சு சரத் பொன்சேகா வசம்? நாளை முக்கிய அறிவிப்பு

wpengine

வவுனியா போக்குவரத்துக்கு இடையூர் மக்கள் குற்றம்

wpengine

அச்சிடப்படும் பணமும், நாட்டின் பொருளாதாரமும்!

wpengine