பிரதான செய்திகள்

காணியினை சுவிகரிக்க கத்தோலிக்க சிலை அமைத்த அரிப்பு மக்கள்! வெள்ளிமலை மக்கள் கண்டனம்

 (சிபான் )

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி கிராம சேவையாளர் பிரிவுக்கு சொந்தமான காணியில் வெள்ளிமலை முஸ்லிம் குடியேற்றம் அமைக்கபெற்று பல வருடகாலமாக வாழ்ந்துவருகின்ற போது வெள்ளிமலை பதியுதீன் பாடசாலைக்கு அருகில் உள்ள அரச காணியினை  அரிப்பு கத்தோலிக்க கிராம மக்கள் அடாத்தாக சுவிகரித்து வேற்றுக்காணிக்கான சுற்றுமதில் அமைக்கும் வேலை திட்டத்தினை மேற்கொண்டுவருவதாக  வெள்ளிமலை கிராம மக்கள் குற்றம் சுமத்தி உள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

வெள்ளிமலை கிராமத்திற்கு சொந்தமான காணியினை சுவிகரித்துகொள்ளும் நோக்குடன் அரிப்பு கிராம மக்கள் கடந்த 5வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வாழும் காணியில் உருவ சிலை ஒன்றினை அமைத்தார்கள் என்றும் ஆனால் அரிப்பு கத்தோலிக்க கிராமத்திற்கும்  வெளிமலை கிராமத்திற்கும் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் இடைவெளி இருக்கின்றது அதுபோல் அரிப்பு கிராமத்தில் பெரிய கத்தோலிக்க வழிபாட்டு தளம் ஒன்று இருக்கின்ற போது காணியினை சுவிகரிக்கும் நோக்குடன் சிலையினை அமைத்துள்ளார்கள் எனவும் தெரிவித்தனர்.

இந்த உருவ சிலையில் எந்த ஒரு மத வழிபாட்டு நிகழ்வுகளும் மேற்கொள்ளாத போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதி ஒதுக்கீட்டு பணத்தில் பெற்று நேற்றைய தினம் சுற்றுமதில் அமைக்கும் வேலையினை இவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தனர்.

இந்த காணியில் சுற்றுமதில் அமைக்க முசலி பிரதேச சபை,பிரதேச செயலகம் எந்த வித சட்ட ரீதியான ஆவணங்கள் எதும் வழங்காத வேலையில் இந்த நடவடிக்கையில் தமிழ் கத்தோலிக்க மக்கள் கொண்டுள்ளார்கள் என தெரிவித்தனர்.

இது தொடர்பில் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்,உரிய நடவடிக்கை எடுத்து வெள்ளிமலை மக்களின் காணியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளிமலை மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.

Related posts

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது மயில் கட்சி யானையில்

wpengine

திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார்.

wpengine

முசலி பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் அழத்தம்

wpengine