பிரதான செய்திகள்

காடழிப்பு, மணல் கொள்ளைக்கு அதிகாரிகள் ஆதரவு

சுப்பிரமணியம் பாஸ்கரன் ‘முல்லைத்தீவு புத்துவெட்டுவான் பகுதியில் காட்டுமரங்களை வெட்டுதல், மணல் அகழ்வு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’  என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள புத்துவெட்டுவான் மற்றும் பழைய முறிகண்டி பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள், கிராமங்களில் வசிக்கும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளின் துணையுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன. தடுக்க வேண்டிய அதிகாரிகள் இதற்று ஒத்துழைப்பு வழங்குகின்றனர்’ என அந்த மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

Related posts

ரங்காவின் இஸ்லாமிய போதனை! எதிரான முகநூல் பதிவுகள் (உள்ளே)

wpengine

அம்பாறை மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் முஸ்லிம் ஒருவர்

wpengine

தலைமன்னாரில் மீனவர்களுக்கு காப்புறுதி பணம் வழங்கி வைப்பு

wpengine