முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் இயங்கும் கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட பல பகுதிகளில் புத்தர் சிலை வைப்பதற்கு தம்மால் எதுவித தடங்களும் வராதென பெரிய தொகைக்கு ஒப்பந்தமொன்று முஸ்லிம் காங்கிரஸுடன் செய்யப்பட்டுள்ளதாகவும் இப்போது அவ்ஒப்பந்தத்தை அவர்கள் மீறியுள்ளதாகவும் அமைச்சர் தயாகமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இந்த சம்பவத்தில் தான் ரவூப் ஹக்கீம், மன்சூர் எம் பி, மற்றும் முதலமைச்சருடன் பேசிய போது அவர்கள், சிலைவைப்பு விடயத்தில் தாங்கள் தலையிட கூடாதென்றால்குறித்த பணத்தொகை தரவேண்டுமென்றும் இதற்கு கட்சியுடன் ஒப்பந்தமொன்றும் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறினர். அதற்கு சம்மதித்து பணத்தொகையை கையளித்த பின்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி 7 இடங்களில் சிலை வைக்க அனுமதி தரப்பட்டது. அந்த இடங்கள் அனைத்தும் அவர்களாலேயே தெரிவு செய்யப்பட்டு தரப்பட்டது.
தற்போது இவர்கள் மக்கள் முன்னிலையில் நடிப்பது எதற்காகவென்று தனக்கு தெரியாதென்றும் இவர்கள் அவ்வொப்பந்தத்தை மீறுவார்களாயின் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.