உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 நாட்களில் 322 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டாலும் சமீபத்தில் குழந்தைகள் பலி அதிகரித்துள்ளதாக யூனிசெப் அமைப்பு பெரும் கவலை தெரிவித்துள்ளது.

முடிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் மீண்டும் ஆங்காங்கே இரு தரப்பினரும் தாக்குதலை முன்னெடுத்துவருகின்றனர்.

காசா பகுதியில் கடந்த 10 நாட்களில் 322 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 609 பேர் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். பல குழந்தைகள் ஆதரவற்று தங்க இடமின்றி தவிப்பபதாகவும், பலர் முகாம்களில் வைக்கப்பட்டுள்தாகவும் தெரிகிறது எனவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 18 மாதங்களில் 15 ஆயிரம் குழந்தைகள் பலியாகி உள்ளனர். 34 ஆயிரம் பேர் காயமுற்றுள்ளனர். தொடர்ந்து குழந்தைகள் பலி உயர்வு பெரும் கவலை அளிக்கிறது.

தண்ணீர் தட்டுப்பாடு, உணவு பற்றாக்குறை, சத்துகுறைபாடு, அடிப்படை தேவை கிடைப்பதில் சிரமம் ஆகியவற்றால் இன்னும் பல குழந்தைகள் உயிரிழக்க நேரிடும். இது நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்க முழு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மேற்படி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தினர்.இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.

இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சவூதியின் தலைநகர் மீது திடீர் ஏவுகணை தாக்குதல்

wpengine

சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது

wpengine

அமோ கட்சியிலிருந்து மஹாத்தீர் மொஹமட் விலகினார்

wpengine